கோவை ஆனைகட்டி செல்லும் மாங்கரை பகுதியில், ஒற்றைக் காட்டு யானை ஒன்று சாலையை கம்பீரமாக கடந்து சென்ற காட்சி தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
சாலையோரம் வந்த யானை, சிறிது நேரம் சாலையில் நடந்து சென்று மறுபுறம் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணித்தனர்.
யானை சாலையை கடந்து செல்லும் காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
வனப்பகுதி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், காட்டு விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply