பெண்கள் தலைமையில் ‘பிங்க் ரோந்து’! – டெல்லி முழுவதும் பாதுகாப்பை வலுப்படுத்தும் காவல்துறை

டெல்லி நகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், காவல்துறை சார்பில் பெண்கள் தலைமையிலான ‘பிங்க் ரோந்து’ குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறையின் கண்காணிப்பை அதிகரிப்பதுடன், அவசரநிலைகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இந்த ரோந்து குழுக்கள் செயல்படுகின்றன.
இதன் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையின் நேரடி இருப்பு அதிகரித்து, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.