பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் நின்றிருந்த யானையை மோதுவது போல், லாரியை வேகமாக இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜின்ஷாத், யானைக்கு அருகே லாரியை வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த யானை சாலையோரம் நகர்ந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது.
சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து, ஓட்டுநருக்கு ₹5,000 அபராதம் விதித்துள்ளனர்.
மேலும், “இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன்” என ஓட்டுநர் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
வனப்பகுதி சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது, வனவிலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
யானையை மோதுவது போல் லாரியை இயக்கிய ஓட்டுநர் ₹5,000 அபராதம் இனி இதுபோல் செய்யமாட்டேன் என மன்னிப்பு!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply