பன்னிமடை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், குப்பை கொட்டும் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை குறைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்களது புகார்களை முன்வைத்தனர்.
சங்கனூர் பள்ளத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வந்த ஏரி தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஏரி இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
லாரிகள் மூலம் தொடர்ந்து குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுவதால், துர்நாற்றம், கொசுத்தொல்லை மற்றும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
மேலும், இப்பகுதியில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இரவு நேரங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஆட்சியரின் உத்தரவு இருந்தபோதிலும் குப்பை கொட்டுவது தொடர்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கவும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தனித்தனியாக சேகரிக்கும் முறையை உடனடியாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பன்னிமடை பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
40 ஆண்டுகள் பழமையான ஏரியில் குப்பை கொட்டப்படுகிறதா? – பன்னிமடை கிராம சபையில் மக்கள் கடும் எதிர்ப்பு!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply