இந்தியாவின் அமைதி முயற்சிக்கு உக்ரைன் பாராட்டு!

ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் இந்தியா முன்வைத்துள்ள அமைதித் திட்டம் குறித்து உக்ரைன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறுகையில், பல்வேறு நாடுகள் முன்வைத்துள்ள நான்கு அமைதி முன்மொழிவுகளில், இந்தியாவின் முன்மொழிவு மிகவும் விரிவானது என தெரிவித்துள்ளார். மேலும், போரில் அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியா முதன்முறையாக தீவிரமான பங்காற்ற தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருங்கடல் பகுதியில் எரிசக்தி மற்றும் வேளாண்மை தொடர்பான போர் நிறுத்தம், மேலும் முன்களப் பகுதியில் பரந்த அளவிலான போர் நிறுத்தம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உக்ரைன் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் அமைதி முயற்சிகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். மோடி தொடர்ந்து உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து வலியுறுத்தி வருவதாகவும், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கான நல்ல யோசனைகள் அவரிடம் இருப்பதாகவும் புதின் கூறியுள்ளார்.
இதனால், ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் சர்வதேச தூதரக முயற்சிகளில் இந்தியாவின் பங்கு குறித்த கவனம் தற்போது அதிகரித்துள்ளது.