தாராபுரத்தில் மாட்டு வண்டி ஓட்டி விஜய் – வைரலாகும் காட்சிகள்!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழக முதல்வரும், த.வெ.க. கட்சித் தலைவருமான சி. ஜோசப் விஜய் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
த.வெ.க. வேட்பாளர் பி. சத்யபாமாவுக்கு ஆதரவாக இன்று நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்ற விஜய், பிரசார வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கீழே இறங்கி, அங்கிருந்த பாரம்பரிய மாட்டு வண்டியில் ஏறினார்.
மாட்டு வண்டியில் நின்றபடியே சிறிது தூரம் வண்டியை ஓட்டிய விஜய், எதிர்பாராதவிதமாக லேசாகத் தடுமாறினார். இருப்பினும் உடனடியாக சமாளித்துக்கொண்டு தொடர்ந்து வண்டியை இயக்கினார்.
அப்போது ஆதரவாளர்கள் அவருக்கு பச்சைத் துண்டை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர்கள், மாலைகள் மற்றும் புகைப்படப் பரிசுகளை வழங்கி வரவேற்றனர்.
மாட்டு வண்டி ஓட்டிய விஜயின் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.