வள்ளுவர் கோட்டத்தில் நள்ளிரவு பைக் சாகசம் – பொதுமக்கள் அவதி!

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சில இளைஞர்கள் பைக்குகளில் சாகசங்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிக வேகத்தில் பைக்குகளை இயக்குவது, சாகசம் செய்வது உள்ளிட்ட செயல்களால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுபோன்ற செயல்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“வள்ளுவர் கோட்டத்தில் நள்ளிரவில் பைக் சாகசங்கள் நடக்கிறது… @chennaipolice_ எங்கே?” என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.