கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள மாணவிகள் விடுதியில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, மாணவிகள் இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதி வளாகத்தைச் சுற்றி இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாகவும், இதனால் தங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டினர்.
பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் மயங்கி விழுந்த மாணவிக்கு உதவி செய்தனர். மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply