தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்காக இதுவரை ₹31 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், தன்னுடன் இருக்கும் தவெக நிர்வாகிகளின் உணவுக்காக மட்டும் ₹15 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் சத்யபாமா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கட்சியினருடன் இணைந்து செயல்பட வேண்டியிருப்பது குறித்தும் அவர் கடுமையாகப் பேசியதாக கூறப்படுகிறது.
சத்யபாமாவின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.
எனினும், அவர் குறிப்பிட்ட ₹31 கோடி மற்றும் ₹15 லட்சம் செலவு குறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் தற்போது கிடைக்கவில்லை.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply