இன்ஸ்டா இன்புளூவன்சர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில், இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த சிறுமியின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாகக் கூறி மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
சிறுமிக்கு உதவுவது போல நடித்து, அவரது உறவுக்கார அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சிறுமியின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி, சிறுமியின் காதலன் உட்பட 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் அடையாளத்தையும், தனிப்பட்ட தகவல்களையும் வெளியிடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.