கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிராம் நகைக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட கடன் தொகை, இனி புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே பெறப்பட்டு தற்போது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் முழுமையாக பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஒரு கிராம் நகைக்கு அதிகபட்சமாக ரூ.7,000 அல்லது சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply