கோவையில் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில், ‘சே நோ டு டிரக்ஸ்’ மற்றும் ‘சேவ் யுவர் நீ’ என்ற இரட்டை விழிப்புணர்வுடன் ‘ரன் ஃபார் நேஷன் 2026’ மாரத்தான் நடைபெற்றது.

VGM காஸ்ட்ரோ, ஆர்த்தோ மற்றும் பல்துறை சிறப்பு மருத்துவமனை மற்றும் கோவை தடகளக் கழகம் இணைந்து நடத்திய இந்த மாரத்தான், கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 4,750 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றதுடன், மாணவர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில், 7,000-க்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார் கொடியசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தார்.
பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பதிவு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு மாரத்தான் மூலம் திரட்டப்பட்ட நிதி பயன்படுத்தப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
போதைக்கு எதிராக இளைஞர்களை ஒன்றிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்த மாரத்தான், அனைவரின் கவனத்தை ஈர்த்தது














Leave a Reply