“ஆண்களுக்கும் Period வந்திருந்தா… Leave Policy வேற லெவல்!” – ஸ்ருதி ஹாசன் கலகல கருத்து!

மாதவிடாய் வலி… அதிலும் PCOS பிரச்சினை… இதனால் மாதவிடாய் நாட்களில் கடுமையான வலியை அனுபவிப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
சோஹா அலிகானின் Podcast நிகழ்ச்சியில் பேசிய அவர், மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான சிரமங்கள் மற்றும் பணியிடங்களில் கிடைக்க வேண்டிய ஆதரவு குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது, “ஆண்களுக்கும் மாதவிடாய் வந்திருந்தால், அதிகாரப்பூர்வமாக Period Leave என்ற ஒன்று இருந்திருக்கும்!” என சற்றே நகைச்சுவையாக குறிப்பிட்ட ஸ்ருதி ஹாசன், அப்படி இருந்திருந்தால் வேலை ஒப்பந்தத்திலேயே மாதவிடாய் விடுமுறை இடம்பெற்றிருக்கும் எனவும் கூறினார்.
அதே நேரத்தில், மாதவிடாய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பெண்கள் வெளிப்படையாக பேச வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“Period வந்தால் Leave… இல்லையென்றால் வேலை!” — இப்படியொரு உலகம் இருந்திருக்குமோ?