தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சிகிச்சையின்போது தாய் உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், மருத்துவமனை நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தினர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply