கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், அக்டோபர் 6ஆம் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மாநகராட்சி மேயர் திருமதி கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் நேரடியாக பரிசீலித்தார்.
மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என மேயர் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு. கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., துணை மேயர் திரு. ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் திரு. த.குமரேசன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.










Leave a Reply