அட்வான்ஸ் புக்கிங்கில் ₹22 கோடியைத் தாண்டிய ஜெயிலர் 2!  ரஜினிகாந்த் படத்திற்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே வசூலில் அதிரடி காட்டி வருகிறது!
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் உலகளாவிய முன்பதிவு வசூல் ₹22.32 கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், வெளிநாடுகளில் மட்டும் ₹17 கோடிக்கும் அதிகமாகவும், இந்தியாவில் சுமார் ₹5.32 கோடியும் முன்பதிவு மூலம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில், ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரின் சிறப்புத் தோற்றங்களும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
வழக்கமான இசை வெளியீட்டு விழாவிற்குப் பதிலாக, ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினருடன் மூன்று மணி நேரச் சிறப்பு தொலைக்காட்சி நேர்காணல் அக்டோபர் 11ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் திரையரங்குகளில் புதிய வசூல் சாதனைகளைப் படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது!