தர்மபுரியில் தொடர் கொள்ளை முயற்சி! 2 கல்லூரி மாணவிகள் உட்பட 4 பேர் கைது – சொகுசு காரில் வந்து சிக்கிய கும்பல்!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில், தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 2 கல்லூரி மாணவிகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சொகுசு காரில் சென்று வீடுகளைக் குறிவைத்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இந்தக் கும்பல், அப்பகுதியில் உள்ள வீடுகளில் கைவரிசை காட்ட முயன்றுள்ளது.
மேலும், மொத்தம் 5 வீடுகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தபோது, போலீசாரிடம் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.