கோவை வந்த முதல்வர் விஜய்க்கு எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் வாழ்த்து!

கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் கோவைக்கு வருகை தந்தார்.
அப்போது, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆர்.டி. கனிமொழி சந்தோஷ் அவர்கள், முதலமைச்சரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவை முன்னிட்டு வாழ்த்துகள் பரிமாறப்பட்டன.