கோவையில் நேற்று பெய்த கனமழையால் குனியமுத்தூர், பி.கே.புதூர் மற்றும் இ.பி.காலணி பகுதிகளில் மழைநீர் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக மேற்கொண்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தார்.
இக்கட்டான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அறிந்து விரைந்து உதவிகளை மேற்கொண்ட இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.










Leave a Reply