கோவையில் மழைநீர் தேக்கம் அகற்றம் – அமைச்சர் நேரில் ஆய்வு!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட லங்கா கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். இதன் தொடர்ச்சியாக, வாகனங்கள் சிரமமின்றிச் செல்வதை அமைச்சர் வே. சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மழைக்காலத்தில் போக்குவரத்துப் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், மழைநீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.