கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டி பகுதியில், போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலங்கள் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களது நிலங்களை மீட்டுத் தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளானைப்பட்டி சுப்பையர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல் என்பவர், தனக்குச் சொந்தமான நஞ்சை நிலங்கள் உரிய அனுமதியின்றி வேறு நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும், 20 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தொடர்பாகவும் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த வேண்டும், போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலங்களை மீட்டுத் தர வேண்டும், விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட நிலங்களில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாய நிலங்கள் தொடர்பான இந்தப் புகாரில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply