கோயம்புத்தூர் | அக்டோபர் 26
காதல் திருமணம் செய்துகொண்டதால், பெண்ணுக்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் கோவை புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சேர்ந்த 21 வயதான பொதும்பொண்ணு, அங்குள்ள செல்பேசி கடையில் பணிபுரிந்தபோது தமிழ்செல்வன் என்பவரைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை 25 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வீட்டிலிருந்து வெளியேறிய பொதும்பொண்ணு, தமிழ்செல்வனைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது கோவை இடிக்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள தம்பதியினர், தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்செல்வனின் குடும்பத்தினரைக் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவையில் காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்! – பாதுகாப்பு கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply