மாணவன் அகிலன் மரணம் – 6 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கு!

மாணவன் அகிலனின் மரணத்திற்கு நீதி கேட்டு, தொடர்ந்து 6 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தின் எதிரொலியாக, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, உயிரிழந்த மாணவன் அகிலனின் உடலைப் பார்த்த பெற்றோர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. தங்களது மகனின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என பெற்றோர் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து 6 நாட்களாக நீடித்த போராட்டத்திற்குப் பிறகு, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விசாரணையின் முடிவில் உண்மை வெளிவருமா, மாணவன் அகிலனின் மரணத்திற்கு நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.