கீழே கிடந்த 2 பவுன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவர்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே, சாலை ஓரத்தில் கிடந்த சுமார் இரண்டு பவுன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்து நேர்மையை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர் தமிழரசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆலவயல் பகுதியில் சாலை ஓரத்தில் கிடந்த தங்கச் சங்கிலி மற்றும் கைச் செயினை எடுத்த மாணவர் தமிழரசன், அவற்றை உரியவரிடம் சேர்க்கும் நோக்கில் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
மாணவரின் இந்த நேர்மையான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். சிறுவயதிலேயே நேர்மையையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்திய மாணவர் தமிழரசனின் செயல் அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.