கோவையில் 2 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

கோவையில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை டிவிஎச் அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் இன்று காலை முதல் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் பணியிடங்களுக்கான நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சோதனைகள் தொடர்பாக அதிகாரப்பூர்வமான கூடுதல் விவரங்கள் வெளியாகும் நிலையில், மேலும் தகவல்கள் தெரியவரும்.