தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மோனிகா ரானா ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்பு!

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக மரு. மோனிகா ரானா, இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று (அக்டோபர் 29) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், புதிய மாவட்ட ஆட்சியராக மோனிகா ரானா அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் நிர்வாகப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள மோனிகா ரானாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.