கோவையில் டெங்கு தடுப்பு பணியில் மாநகராட்சி அதிரடி!

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களுக்கு இடையே, “அதிரடி சரவெடி” என்ற தலைப்பில் டெங்கு தடுப்பு கூட்டுத் தூய்மைப் பணி போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 71, 72 மற்றும் 73-வது வார்டு பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக் காரணமாக இருக்கும் பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெற்ற இந்தப் பணியின் மூலம், டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கவும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.