இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை நினைவு தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அதிமுக நகர செயலாளர் டபிள்யூ.ஜி. மோகன், அமமுக மாவட்ட செயலாளர் சிட்டிபாபு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியல் மற்றும் ஆன்மிகத் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தேசப்பற்று, தியாகம் மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூரும் வகையில் இந்த விழா நடைபெற்றது.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வாலாஜாபேட்டையில் அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply