கோவையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் கடன் மோசடி புகார்!

கோவையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
கனரா வங்கியில் தலா 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கிவிட்டு, மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயை ஜெயந்தி நவீன்குமார் எடுத்துக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் முழு கடன் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் கவிதா, கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை மீட்டுத் தரவும் கோரிக்கை விடுத்துள்ளார்.