தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள், இன்று சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கியிருந்த பல்வேறு படைப்புகளைக் கொண்ட அரங்குகளை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.
மாணவர்களின் தொழில்நுட்பத் திறன், புதுமையான சிந்தனை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த அரங்குகளைப் பார்வையிட்டு, மாணவர்களின் படைப்புகளை அவர் கவனித்தார்.
இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய நிர்வாகிகள் உடனிருந்தனர்.












Leave a Reply