பெரம்பலூரில் தவெக ஆட்சிக்கு எதிராக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்!

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி மகளிர் அணியினர் களத்தில் இறங்கினர்.
இந்தப் பிரச்சினைகளைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.