கோவையில் ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு ரூ.200-க்கு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் வெ.சம்பத்குமார் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியப்பனவர் கலந்து கொண்டார். மேலும், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
மொத்தம் 1,450 கிராம் எடையுள்ள 10 வகையான மளிகைப் பொருட்கள் பசுமைப் பையில் வழங்கப்படுகின்றன. மாநகராட்சிப் பகுதிகள் அல்லாத இடங்களில் உள்ள 128 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இத்தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மளிகைப் பொருட்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த தொகுப்பாக மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள்! – சிறப்புத் தொகுப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார் அமைச்சர்!

What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply