கோவையில் சிறைத்துறை பெட்ரோல் பங்க்குகள் தற்காலிகமாக மூடல்!

கோவையில் நன்னடத்தை கைதிகள் மூலம் செயல்பட்டு வந்த சிறைத்துறைக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க்குகள், மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கோவை மத்திய சிறையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வழக்கம்போல் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்த வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மறு உத்தரவு வரும் வரை பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டிருக்கும் என்பதால், வாகன ஓட்டிகள் மாற்று பெட்ரோல் பங்க்குகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.