கோவையில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா!

கோவை மாநகர், செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (RSS) சார்பில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விஜயதசமி பாதை சஞ்சலன் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கோவை மாநகர் தெலுங்குபாளையம் கேந்திரம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, கஸ்தூரி நகர் எல்ஐசி காலனி பகுதியில் இருந்து தொடங்கியது. இதில் ஸ்வயம்சேவகர்கள் அனைவரும் முழுச் சீருடையுடன் பங்கேற்று அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், செல்வபுரம் D-2 காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளால், எவ்வித அசம்பாவிதமும் இன்றி அணிவகுப்பு ஊர்வலமும் பொதுக்கூட்டமும் அமைதியான முறையில் நிறைவடைந்தது.