வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! தமிழகத்திற்கு மழை வாய்ப்பு?

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.