கோவையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாட்டர் மேன்களுக்கு தீபாவளி பரிசு, இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு!

முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாட்டர் மேன்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V. சம்பத்குமார் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.
இதில் 40-க்கும் மேற்பட்ட தூய்மைக் காவலர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, மதிய உணவும் வழங்கப்பட்டது. மேலும், பன்னீர்மடை ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.