கோவையில் ரூ.1.98 கோடியில் 5 நவீன சாலை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் தொடக்கம்!

கோவையில் தூய்மைப் பணிகளை நவீனப்படுத்தும் வகையில், ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் 5 புதிய சிறிய ரக சாலை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களின் பயன்பாட்டை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சாலை தூய்மைப் பணிகள் மேலும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.