கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த அமுதன் என்ற மாணவர், சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கல்லூரி மற்றும் விடுதி வளாகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருப்பது குறித்து புகார் தெரிவித்த காரணத்தால் தான், ஆத்திரமடைந்த கும்பல் அவரை அடித்துக் கொன்றதாக மாணவரின் பெற்றோர் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மாணவர் அமைப்பினர் கல்லூரி நுழைவு வாயில் முன்பாகத் திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












Leave a Reply