ஆகஸ்ட் 12-ஆம் தேதி ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்பட்டு வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாலக்காடு மாவட்டம் வாளையார் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட கஞ்சிக்கோடு – வாளையார் இடையேயான தண்டவாளப் பகுதியில், தாய் யானை ஒன்று தன் குட்டியுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளது.
அப்போது, மங்களூரில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த மங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக யானைகள் மீது பலமாக மோதியது.
இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த தாய் யானையும், அதன் குட்டியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.”
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள், உயிரிழந்த யானைகளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரயில் எஞ்சின் சேதமடைந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாளையார் வனப்பகுதி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு ரயில்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், அகச்சிவப்பு கதிர்கள் (Infrared Cameras) மற்றும் AI கண்காணிப்பு அமைப்புகளைச் சரியாகப் பயன்படுத்தவும் கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், உலக யானைகள் தினத்திலேயே இந்த விபத்து நடந்துள்ளது காட்டுயிர் ஆர்வலர்களைக் கடுமையான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.”










Leave a Reply