சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் எதிர்பாராத சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சமூக ஆர்வலர் பாஸ்கர் ஆட்சியர் மேடை அருகே திடீரென தரையில் அமர்ந்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, “எல்லோருக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது; எனக்கு மட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லை” எனக் கூறி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் விழா நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற இந்த வித்தியாசமான போராட்டம், அங்கிருந்த பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply