மதுரையில் விதிமீறி ஷேர் ஆட்டோ: அரசுப் பேருந்து மீது மோதி விபத்து!

மதுரையில் விதிகளை மீறி மதுபோதையில் ஷேர் ஆட்டோ இயக்கியவர்கள் அரசுப் பேருந்து மீது மோதிய விபத்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.