வேளந்தாவளம் சோதனைச் சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உரிய ஆவணங்களின்றி, தனது உடலில் பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட துணிப்பையில் கட்டி மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட ரூ.16 லட்சம் ரொக்கப் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாதவ் சதாசிவ் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களுக்காகக் கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்துப் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









Leave a Reply