தலைகீழாய் பறந்த தேசியக் கொடி – வேலூரில் அதிர்ச்சி!

வேலூரில் 80வது சுதந்திர தின விழாவின் போது தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தேசியக் கொடி தலைகீழாக இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்விலேயே இத்தகைய அலட்சியம் நடந்துள்ளதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.