இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாக புகார்: தவெக நிர்வாகி மைக்கேல் கைது

இந்து கடவுள்களை.. இழிவுப்படுத்திய தவெக நிர்வாகி மைக்கேல்.. டவர் சிக்னலை வைத்து தூக்கிய போலீஸ்!

கோவை: இந்துக்களின் வழிபாட்டுக் கடவுளான முருகப்பெருமான் மற்றும் இந்து மத நம்பிக்கைகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளையும் படங்களையும் பதிவிட்டதாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி மைக்கேல் என்பவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மைக்கேல் ராஜ் தனது எக்ஸ் (ட்விட்டர்), முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் மைக்கேல் என்ற பெயரில் கணக்கு தொடங்கி தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகள் குறித்தும், குறிப்பாக முருகப்பெருமான் குறித்தும் ஆபாசமான மற்றும் இழிவான கருத்துகளையும் அவதூறு சித்தரிப்புகளையும் பதிவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பதிவுகள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.