திருவண்ணாமலையில் விவசாயிகள் சாலை மறியல் – குறுக்கே வந்த இளைஞரால் பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், விவசாயிகளின் முழு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையின் குறுக்கே இளைஞர் ஒருவர் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.