திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியின் எடையில் முறைகேடு செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அரிசி எடை போட பயன்படுத்தப்பட்ட தராசில், 1 கிலோ எடைக்கல்லுக்கு பதிலாக இரும்பு எடைக்கல்லை வைத்து நூதன முறையில் எடையில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியும், ரேஷன் கடை நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதுடன், முறைகேடு நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply