கோவளத்தில் அமித் ஷாவை சந்தித்து வரவேற்ற விஜய்

செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
தென் மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்திற்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் மற்றும் தென் மாநிலங்களுக்கிடையேயான விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.