கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், க.க.சாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக நாம் தமிழர் கட்சி கையூட்டு பாசறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரில் பலமுறை புகார் மனு அளித்ததுடன், பிரதமர் அலுவலகத்திற்கும் மனு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர் அளித்த பதில் கடிதத்தில், புகார் தொடர்பாக பேரூராட்சி உதவி இயக்குநருக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் பா.முருகன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், பேரூராட்சி உதவி இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி கையூட்டு பாசறை சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் பா.முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
க.க.சாவடி அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் கோரி புகார் – நடவடிக்கை இல்லையெனில் போராட்டம் என நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply