பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்.

கோவை மாவட்டம்
20.08.2026 அன்று

பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்…

சமூகத்தின் நஞ்சாக கருதப்படும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பவன் K.ரெட்டி, இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் (20.08.2026) இன்று பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பேரூர் காவல் நிலைய காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான தீத்திபாளையம் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த பேரூர் பகுதியைச் சேர்ந்த பால்துரை நாடார் மகன் சாரங்க பாண்டி வயது(52) இவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கோவை மாவட்ட காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது காவல்துறையின் உதவி எண்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து சமூக நலனுக்காக ஒத்துழைக்குமாறு கோவை மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள், கோவை மாவட்ட காவல்துறையின் “நிழல்” (Nizhal) என்ற QR குறியீடு அடிப்படையிலான பாதுகாப்புத் தளத்தைப் பயன்படுத்தி, தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக தகவல்களை பகிரலாம். மேலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081 00100 ஆகிய எண்களிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

பேரூர் காவல் ஆய்வாளர் திரு.நசீர் அவர்கள் தலைமையில் பேரூர் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான தீத்திபாளையம் ஏ கே சி அவன்யூவை சேர்ந்த இமானுவேல் என்பவரை தேடி வருகின்றனர்.