சேலத்தில் விதிமீறல்களுக்கு தானியங்கி கேமரா மூலம் இ-சலான்!

சேலம் மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தானியங்கி கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தானியங்கி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
விதிமீறல்கள் கேமராவில் பதிவானதும், சம்பந்தப்பட்ட வாகனத்தின் விவரங்கள் அடிப்படையில் இணைய வழியாக இ-சலான் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதன் மூலம் சாலை விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், விபத்துகளை குறைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதே நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.